உப்புமா என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு உப்புமா கிச்சடி என்றால் மிகவும் பிடிக்கும். அவருடைய ஃபேவரட் லிஸ்டில் முதலில் உள்ளது உப்புமா கிச்சடி என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால் தனக்கு உப்புமா பிடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியே ஒரு இண்டர்வியூவில் கூறியுள்ளார். அப்படி அவருக்கு பிடித்த உப்புமா கிச்சடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரவை
வெங்காயம்
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
எண்ணெய்
உப்பு
பெருங்காயத்தூள்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் ரவையினை கொட்டி நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பினை கொட்டி நன்றாக பொரியும் வரை தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் . அடுத்து அதனுடன் பச்சை மிளகாய் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
Modiji ka favorite Upma | Celebrity recipes
பிறகு நன்றாக கொதித்ததும் நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையினை கொட்டி கிளற வேண்டும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கி மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவினால் சுவையான உப்புமா தயாராகி விடும்.