தாய்ப் பாலுக்கு இணையான உணவு... கொலஸ்ட்ரால் உள்ளவங்க இதை நோட் பண்ணுங்க!
"குறிப்பிட்ட அளவு கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு அத்தியாவசியம். தாவர எண்ணெய்களில் கொழுப்பு நேரடியாக இல்லை. ரத்த கொழுப்பு அளவை குறைக்க பலரும் தேங்காய் உண்பதை தவிர்க்கிறார்கள்." என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
சித்த மருத்துவர் சிவராமன் எப்போதும் உடலை பாதுகாக்க வேண்டும், உணவை முறைப்படி உண்ண வேண்டும், பாரம்பரிய உணவு வகைகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், ரத்த கொழுப்பு அளவை எப்படி குறைக்கலாம் என்று அவர் பகிர்ந்திருக்கிறார். அதனை இங்குப் பார்க்கலாம்.
Advertisment
மருத்துவர் சிவராமன் யூடியூப் வீடியோ ஒன்றில், "குறிப்பிட்ட அளவு கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு அத்தியாவசியம். தாவர எண்ணெய்களில் கொழுப்பு நேரடியாக இல்லை. ரத்த கொழுப்பு அளவை குறைக்க பலரும் தேங்காய் உண்பதை தவிர்க்கிறார்கள். குறிப்பாக தேங்காய் எண்ணெய், தேங்காய் சட்னி, தேங்காய் துருவல் சேர்க்க வேண்டாம் என ஒதுக்குகிறார்கள். தேங்காயைப் பார்த்தாலே ரத்த கொழுப்பு அளவு கூடி விடும் எனப் பலரும் நினைக்கிறார்கள். அந்த மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டார்கள்.
ஆனால், தாவர எண்ணெய்களில் கொழுப்பு இல்லை. விலங்குகளின் கொழுப்புகளில் தான் நேரடியாக கொழுப்புகள் இருக்கிறது. நெய்யில் கொழுப்பு உண்டு. ஆனால் தேங்காயில் கொழுப்பு இல்லை. தேங்காய் எண்ணெயில் இருக்கும் அமிலங்கள் அதிகம் உடலுக்குள் சென்றால், அதுதான் கொழுப்பாக அல்லது கொலஸ்ட்ராலாக மாறும்.
தேங்காய் எண்ணெய் பல வகையில் உடலுக்கு நல்லது. உதாரணமாக, தேங்காய் பாலில் மோனோலாரின் என்கிற அமிலம் இருக்கிறது. இவை உடல் வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்திக்கு தலைசிறந்தாக இருக்கிறது. இன்னும் குறிப்பாக, தாய்ப் பாலுக்கு இணையான சத்து இந்த மோனோலாரின் அமிலத்தில் இருக்கிறது. ஏன்னெனில், இந்த மோனோலாரின் அமிலம் தேங்காய் பாலை தவிர இருக்கும் மற்றொரு இடம் தாய்ப்பால் தான்.
தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் சேர சேர உடலுக்கு அதிக நன்மை பயக்குகிறது. பல்வேறு வகையான கிருமிகளை வராமல் தடுக்கிறது. வயிற்றுப்புண் மற்றும் இதய நோய்களுக்கு அதிக பலன் தருகிறது. தேங்காயில் கொழுப்பு இருப்பதாக எண்ணி நாம் அவற்றை தவிர்த்து வருகிறோம். ஆனால் அதில் தான் அதிக ஆரோக்கியம் இருக்கிறது." என்று அவர் கூறுகிறார்.