கிட்னியில் இருக்கும் கல்லைக் கரைக்கும் இந்தக் கீரை... இப்படி சூப் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
சிறுநீரகத்தில் இருக்கும் கல்லைக் கரைக்கும் இந்தக் கீரையை இப்படி சூப் செஞ்சு சாப்பிடுங்கள். அது என்ன கீரை, எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
சிறுநீரகத்தில் இருக்கும் கல்லைக் கரைக்கும் இந்தக் கீரையை இப்படி சூப் செஞ்சு சாப்பிடுங்கள். அது என்ன கீரை, எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
சிறுநீரகத்தை தூய்மைப்படுத்தி, சிறுநீரகத்தில் இருக்கும் கல்லைக் கரைக்கும் மூக்கிரட்டை கீரையை கஷாயம் போல சூப் வைத்து குடிப்பது எப்படி என்று இங்கே பார்ப்போம். (Image: YouTube/ @Akshyaveetusamayal)
சிறுநீரகத்தில் இருக்கும் கல்லைக் கரைக்கும் இந்தக் கீரையை இப்படி சூப் செஞ்சு சாப்பிடுங்கள். அது என்ன கீரை, எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
Advertisment
சிறுநீரகத்தை தூய்மைப்படுத்தி, சிறுநீரகத்தில் இருக்கும் கல்லைக் கரைக்கும் மூக்கிரட்டை கீரையை கஷாயம் போல சூப் வைத்து குடிப்பது எப்படி என்று அக்ஷ்யா வீட்டு சமையல் (@Akshyaveetusamayal) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர்.
மூக்கிரட்டை கீரை ஒரு களைச் செடிதான். சாதாரணமாக தரையில், குப்பையில் வளரும். இந்த மூக்கிரட்டை கீரையை நம் கஷாயம் மாதிரியும் சாப்பிடலாம். இல்லையென்றால், சூப் வைத்தும் சாப்பிடலாம். கீரை கடையும்போது, இந்த கீரையையும் போட்டு கடைந்து சாப்பிடுவார்கள். பொரியல் பண்ணிகூட சாப்பிடுவார்கள்.
Advertisment
Advertisements
மூக்கிரட்டை கீரை கல்லீரலுக்கு நல்லது. சிறுநீரகத்தில் இருக்கும் கற்களைக் கரைக்கும், சிறுநீரகத்துக்கு நல்லது. சுகர் அளவைக் குறைக்கும். ஒரு கைப்பிடி அளவு மூக்கிரட்டை கீரையை எடுத்து வந்து அலசி சுத்தமாகக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக இடித்துக்க்கொள்ளுங்கள். அதில் 3 கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவு மிளகு, 1 ஸ்பூன் சீரகம் போடுங்கள். ஸ்டவ்வை சிம்மில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து தட்டு போட்டு மூடி வைத்துவிடுங்கள். காலையில், பிரஷ் பண்ணிவிட்டு 1 கிளாஸ் வெறும் வயிற்றில் குடித்தால் ரொம்ப நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.