சுவையான மோர் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
அரிசி மாவு – 1 ஸ்பூன்
மோர் – 1 கப்
மஞ்சள் பொடி, பெருங்காய பொடி – ஒரு சிட்டிகை
உப்பு – சிறிதளவு
தாளிக்க
நெய், ஓமம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 5
செய்முறை
மோரில் அரிசி மாவு, உப்பைக் கரைத்து மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். மிதமாக கொதிக்க விடவும். நன்கு கொதித்தால் மோர் திரிந்து விடும்.
எனவே 2 கொதி வந்ததும் இறக்கி வைத்து நெய்யில் ஓமம், கறிவேப்பிலை தாளித்து போடவும். இது சளிக்கு மிகவும் ருசியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“