இந்த வெயில் சீசனுக்கு இதுதான் பெஸ்ட்... தட்டு சோறு சாப்பிடலாம்: தாளிச்ச மோருக்கு சிம்பிள் டிப்ஸ்
வெயிலுக்கு அனைவரும் விரும்பி குடிக்க வேண்டிய மோரை சுவையாக தாளித்து எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த சீசனுக்கு காரம் போட்டு குழம்பு சாப்பிடுவதை விட சுவையாக மோர் இப்படி செய்து பாருங்கள்.
வெயிலுக்கு அனைவரும் விரும்பி குடிக்க வேண்டிய மோரை சுவையாக தாளித்து எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த சீசனுக்கு காரம் போட்டு குழம்பு சாப்பிடுவதை விட சுவையாக மோர் இப்படி செய்து பாருங்கள்.
வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மோரை வைத்து சுவையாக தாளித்து சாப்பிடலாம். இந்த சீசனில் அதிகம் காரம் சாப்பிடுவதை காட்டிலும் இந்த மாதிரி மோரை தாளித்து மதிய உணவு சாப்பிடுவது சுவையாக இருக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்
தயிர் - 400 கிராம் உப்பு - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி தண்ணீர் எண்ணெய் - 2 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 1 பச்சை மிளகாய் - 3 நறுக்கியது பூண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது இஞ்சி - 1 துண்டு நறுக்கியது சின்ன வெங்காயம் - 12 நறுக்கியது கறிவேப்பிலை கொத்தமல்லி இலை
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பவுலில் தயிர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கட்டி இல்லாமல் கரைத்து விடவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து அதில் பெருங்காயத்தூள், வர மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் பூண்டு, இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக இதில் கருவேப்பிலை சேர்க்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள தயிர் சேர்த்து மிதமான சூட்டில் கலந்து விடவும். ஒரு இரண்டு நிமிடம் இது சூடானதும் மேலே கொத்தமல்லி தலைகளை தூவி பரிமாறலாம். சுவையாக இருக்கும்.