அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. அது மருந்துக்காக இருந்தாலும் அதிகமாக சாப்பிட்டால் அது உடலுக்கு நல்லது இல்லை. மேலும் அதிகமாக வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்றும் டாக்டர் ராஜலெட்சுமி கூறுகிறார்.
Advertisment
அதிகப்படியான வெந்தயம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றில் சத்தம் கேட்பது, செரிமான கோளாறுகள் போன்றவை ஏற்படும். அவர்கள் பார்த்துதான் இருக்க வேண்டும்.
வெந்தயம் ரத்தத்தை தின்னாக்கும் சக்தி உள்ளது. எனவே அதிக வெந்தயம் எடுப்பவர்களுக்கு ரத்த உரைதல் என்கிற செய்கை குறைந்து போகும். அதேபோல சர்க்கரை நோயாளிகள் ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைக்கு மாத்திரை எடுக்கும்போது முறையான பரிசோதனை தேவை என டாக்டர் ராஜலெட்சுமி கூறுகிறார்.
வெந்தயத்தின் உள்ளே இருக்கும் கூட்டுப் பொருட்களால் சிலருக்கு அலர்ஜிகள் ஏற்படலாம். இதனால் உடலில் அல்லது தோலில் சிவப்பாக வீக்கம் ஏற்படலாம். தேவைக்கு அதிக அளவு வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டால், உங்களுக்கு தேவை இல்லாமல் வியர்வைகள் ஏற்படும். அதே சமயத்தில் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது உங்கள் சிறுநீரில் துர்நாற்றம் அதிகமாக வீசும்.கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளக்கூடாது.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.