இன்றைய சூழலில் பெரும்பாலானோர் காலை உணவை எடுத்து கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் காலை உணவு என்பது அன்றைய நாளில் நமக்கு தர வேண்டிய அனைத்து ஆற்றலையும் கொடுக்க கூடிய ஒன்றாகும்.
அப்படியாக காலை உணவை கட்டாயம் எடுத்துகொள்ள வேண்டும். முறையான உணவை, சரியான நேரத்தில், சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம். ஆரோக்கியமான காலை உணவு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உங்கள் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு நல்ல காலை உணவு அந்த நாளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். ஆனால் சிலர் காலை உணவுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. காலையில் ஆரோக்கியமான உணவு எடுக்காததால் அன்றைய நாளுக்கு தேவையான நார்ச்சத்து, புரதங்கள், கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் பாதிக்கப்படும். அப்படியாக காலை உணவை தவிர்த்தாலும் இந்த ஒரு ஸ்மூத்தியை எடுத்து கொண்டால் போதும் அன்றைய நாள் ஆரோக்கியமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மாதுளை
கனிந்த வாழைப்பழம்
ஊறவைத்த பாதாம்
காய்ந்த திராட்சை
செய்முறை
மேல் குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து குடிக்கலாம். இதனுடன் தேவைப்பட்டால் பால், மற்றும் மற்ற நட்ஸ் வகைகளையும் சேர்த்து கொள்ளலாம். சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்து குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு இதனை கொடுப்பதன் மூலம் உடல் பலம் பெறும். தொடர்ந்து வாரத்தில் மூன்று நான்கு நாட்களுக்கு கொடுக்கலாம். பெரியவர்களும் இதனை சாப்பிட்டு வரலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“