இந்த வெயில் காலத்தில் ஒரு ஆரோக்கியமான காலை உணவு ராகி களியாக இருக்கும். மறக்காம சமைத்து பாருங்க
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 200 கிராம்
தண்ணீர்
உப்பு
செய்முறை : 200 கிராம் ராகி மாவை எடுத்து தண்ணீரில் கரைத்துக்கொள்ள வேண்டும். உப்பு சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தற்பொது கரைத்த மாவை ஊற்ற வேண்டும். தற்போது மாவை நன்றாக கிளர வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை கிளர வேண்டும். 3 நிமிடங்கள் வரை இதை மூடி வைக்க வேண்டும். இதனை நன்றாக கையில் தண்ணீர் தடவி பெரிய உருண்டைகளாக உருட்டி கொள்ளலாம். இதற்கு நீங்கள் விரும்பும் சட்னி அல்லது மிளகாய் தூள் சேர்த்த மாங்காய்யுடன் சாப்பிடலாம்.