காலை உணவுக்கு எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு லைட் உணவாக பட்டாணி அவல் உப்புமா எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
அவல் பச்சை பட்டாணி எண்ணெய் நெய் சீரகம் பூண்டு பச்சை மிளகாய் இஞ்சி உப்பு பெருங்காயத்தூள் சர்க்கரை தனியா தூள் கரம் மசாலா தூள் கொத்தமல்லி இலை எலுமிச்சைபழச்சாறு
செய்முறை
Advertisment
Advertisements
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். நெய் உருகியவுடன் சீரகம் சேர்த்து லேசாக வறுக்கவும். இடித்த பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி சேர்த்து குறைந்த தீயில் லேசாக வதக்கவும்.
இப்போது பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக கலந்து விடவும். பட்டாணியில் உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள்,சர்க்கரை, தனியா தூள் சேர்த்து நன்றாக கிளறவும். 5 நிமிடங்கள் கழித்து கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
அவலை 2-3 முறை நன்றாக கழுவி, தண்ணீர் வடித்து ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். இப்போது கழுவிய அவலை பட்டாணியில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். கடைசியாக, ஒரு கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும்.
2-3 சொட்டு எலுமிச்சைபழச்சாறு சேர்த்தால், சுவை இன்னும் அதிகரிக்கும். அவ்வளவு தான் இதை அப்படியே சூடாக இருக்கும்போதே இதை பரிமாறவும்.