கெட்ட கொலஸ்ட்ராலை எல்.டி.எல் என்று அழைப்பார்கள். இந்நிலையில் இந்த கெட்ட கொலஸ்ட்ரால் நமது ரத்த குழாய்களின் சுவர்களில் ஒட்டிக்கொண்டு, ரத்த குழாய்களை குறுகலாக்குகிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்.
இந்நிலையில் ரத்த குழாய்களில் ஓடும் ரத்தத்தை இது தடுக்கும். இதனால் குறிப்பிட்ட உறுப்புகள் மற்றும் தசைகளுக்கு ரத்தம் செல்லாமல் தடைபடும் இது தீவிர நோய்யை ஏற்படுத்தும்.
இந்நிலையில் நாம் கொட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க சில பானங்களை எடுத்துக்கொள்ளலாம்.
கிரீன் டீ
இதில் கடிசின்ஸ் உள்ளது. இந்நிலையில் இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். இந்நிலையில் இதை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
1 கப் கிரீன் டீ
1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு
1 டேபிள்ஸ்பூன் தேன்
ஒரு சிட்டிகை பட்டை பொடி
செய்முறை: தண்ணீருடன் சேர்த்து கிரீன் டீயை தயாரித்து கொள்ளுங்கள். டீயின் சூடு ஆறியதும், அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும். இதற்கு மேலாக பட்டை பொடியை தூவ வேண்டும். நன்றாக கலக்கியதும் அதை குடிக்கலாம்.
மஞ்சள் சேர்த்த பால்
மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது வீக்கத்தை குறைக்கும் பண்புகள் உள்ளது. மேலும் கொலஸ்ட்ரால் அளவில் ஆரோக்கியமான தாக்கம் கொண்டது.
தேவையான பொருட்கள்
1 கப் இனிப்பு கலக்காத பாதாம் பால்
½ டேபிள்ஸ்பூன் மஞ்சள் பொடி
¼ டேபிஸ் ஸ்பூன் மிளகு பொடி
ஒரு சிட்டிகை பட்டை பொடி
செய்முறை: பாதாம் பாலை குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி, மிளகு பொடி சேர்க்கவும். பால் ஆறியதும் அதில் தேவைப்பட்டால் பட்டை பொடி சேர்த்து குடிக்கலாம்.
பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் ‘
பீட்ரூட் மற்றும் கேரட்டில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. மேலும் இதில் நார்சத்து உள்ளது. இவை ஆரோக்கியமான இதயம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவிடாது.
தேவையான பொருட்கள்
1 தோல் நீக்கப்பட்ட பீட்ரூட்
2 கேரட் நறுக்கியது
இஞ்சி துண்டு
1 கப் தண்ணீர்
செய்முறை: கேரட், பூட்ரூ, இஞ்சியை நன்றாக அரைக்கவும். தொடர்ந்து அதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், வடிகட்டி குடிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”