காலையில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது எப்போதும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக கருதப்படுகிறது. இரவு நேர தாமதமாக துரித உணவுகளை சாப்பிட்டு காலை வயிறு நிறம்பி இருப்பது போல உணவு வரும். ஆனால் காலையில் சில உணவு பொருட்களை காலை உணவு முன்பே எடுத்துக்கொள்ளலாம் இதனால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
தர்பூசணி
இதில் 90 % தண்ணீர்தான் இருக்கிறது.இதில் இயற்கையான இனிப்புதான் இருக்கிறது. மேலும் குறைந்த கலோரிகள் கொண்டது. இதில் இருக்கும் மூலக்கூறு கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

காலையில் சூடான தண்ணீர், இளநீர், ஜீரா தண்ணீர் ஆகியவற்றை குடித்தால், ஜீரண மண்டலம் நன்றாக செயல்படும்.
இதுபோல பப்பாளியையும் சாப்பிடலாம்.இதில் கெட்ட கொல்ஸ்ட்ரால் குறைவாக உள்ளது.வயிறு உப்புதல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். கூடுதலாக மலச்சிக்கலை தவிர்க்கலாம்.
இதுபோல உளரவைத்த நட்ஸ் உடலுக்கு புரத சத்தை கொடுக்கிறது. கூடவே ஆரோக்கியமான கொழுப்பு சத்தை தருகிறது.
ஊரவைத்த சியா விதைகளை சாப்பிட்டால் உடலுக்கு நார்சத்து மற்றும் ஒமேகா 3 பேட்டி ஆசிட் கிடைக்கிறது.
இதுபோல பேரிச்சை சாப்பிட்டவுடன் தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்