எலும்பை வலுவாக்கும் வல்லமை... இந்தக் கீரையில் மொறு மொறு தோசை; இப்படி செஞ்சு அசத்துங்க!
மூட்டுவலி உள்ளவர்களுக்கு இந்த கீரை ரொம்ப நல்லது. அதுமட்டுமல்ல, இந்த கீரை எலும்புகளை நல்லா வலுவாக்கும் வல்லமை கொண்டது. அது என்ன கீரை, இந்த கீரையில் தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மூட்டுவலி உள்ளவர்களுக்கு இந்த கீரை ரொம்ப நல்லது. அதுமட்டுமல்ல, இந்த கீரை எலும்புகளை நல்லா வலுவாக்கும் வல்லமை கொண்டது. அது என்ன கீரை, இந்த கீரையில் தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மூட்டுவலி உள்ளவர்களுக்கு இந்த கீரை ரொம்ப நல்லது. அதுமட்டுமல்ல, இந்த கீரை எலும்புகளை நல்லா வலுவாக்கும் என்று முடக்கத்தான் கீரையில் மொறுமொறு தோசை செய்து காட்டியுள்ளனர். (YouTube/ @KadaaiKitchen)
மூட்டுவலி உள்ளவர்களுக்கு இந்த கீரை ரொம்ப நல்லது. அதுமட்டுமல்ல, இந்த கீரை எலும்புகளை நல்லா வலுவாக்கும். அது என்ன கீரை, இந்த கீரையில் தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த கீரையில் மொறுமொறு தோசையை இப்படி செய்து அசத்துங்கள்.
Advertisment
மூட்டுவலி உள்ளவர்களுக்கு இந்த கீரை ரொம்ப நல்லது. அதுமட்டுமல்ல, இந்த கீரை எலும்புகளை நல்லா வலுவாக்கும் என்று கடாய் கிச்சன் (@KadaaiKitchen) என்ற யூடியூப் சேனலில் முடக்கத்தான் கீரையில் மொறுமொறு தோசை செய்து காட்டியுள்ளனர்.
முடக்கத்தான் கீரை மூட்டுவலி உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது. அதுமட்டுமல்ல, இந்த கீரை எலும்புகளை நல்லா வலுவாக்கும். இந்த முடக்கத்தான் கீரையில் தோசை செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
முதலில் ஸ்டவ்வைப் பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாய் வையுங்கள், கடாய் காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றுங்கள், அதில் கொஞ்சமாக மிளகு, சீரகம் போட்டு வதக்குங்கள். இதனுடன் 5 சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு 10 பல்லு போட்டு வதக்குங்கள். இதனுடன் நன்றாக சுத்தம் செய்த ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். உடனே ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு முடக்கத்தான் கீரையை சேர்க்க வேண்டும். கடாயில் இருக்கும் சூட்டிலேயே வதங்கினால் போதும்.
Advertisment
Advertisements
இதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, நன்றாக மைய அரைத்துக்கொள்ளுங்கள். அப்படி அரைத்த முடக்கத்தான் கீரையை ஒரு 5-6 கரண்டி தோசை மாவில் கலந்து நன்றாகக் கலக்கிவிடுங்கள். அப்படி கலக்கும்போது மாவு பச்சை நிறமாக மாறிவிடும்.
இதையடுத்து, ஒரு தோசைக்கல்லைக் காயவைத்து, அந்த மாவை எடுத்து, நன்றாக மெல்லியதாக தோசை ஊற்றுங்கள். வெந்ததும் திருப்பி போடுங்கள். அவ்வளவுதான் முடக்கத்தான் கீரை தோசை ரெடி. நமக்கு ஒரு ஹெல்தியான கிரீன் கலர் தோசை ரெடி. இந்த மாதிரி முடக்கத்தான் கீரை தோசையை வாரத்துக்கு 2 நாளாவது செய்து சாப்பிடுங்கள். உடலுக்கு ரொம்ப நல்லது.