Advertisment

மூட்டு வலிக்கு சிறந்தது.. முடக்கத்தான் கீரையில் தோசை இப்படி செய்யுங்க!

முடக்கத்தான் கீரையில் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mudakathan keerai dosa

Mudakathan keerai dosa

முடக்கத்தான் கீரையில் அதிக சத்து நிறைந்துள்ளது. முடக்கத்தான் கீரை மூட்டு வலி பிரச்சனைகளுக்கு சிறந்ததாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வயது முதியவர்கள் மூட்டு வலி பிரச்சனைகள் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரை எடுத்துக் கொள்ளலாம். இந்த முடக்கத்தான் கீரையில் தோசை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 2 கப்

வெந்தயம் - 1 தேக்கரண்டி

முடக்கத்தான் கீரை - 3 கப்

உப்பு - தேவைக்கேற்ப

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 3 பல்

சின்ன வெங்காயம் - 5.

செய்முறை

இட்லி அரிசி, வெந்தயம் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விடவும். இப்போது முடக்கத்தான் கீரை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன், மிளகு, சீரகம், பூண்டு பல், சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த முடக்கத்தான் விழுதை, தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும். அடுத்ததாக அடுப்பில்

தோசைக்கல் வைத்து சூடானதும் மாவு ஊற்றி பின், சுற்றி எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறலாம். நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் சுவையான இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment