முடக்கத்தான் கீரை முட்டை பொடிமாஸ்: செம ஹெல்த்தி; மதிய சாதத்திற்கு சைடு டிஷ் இப்படி பண்ணுங்க!
மூட்டு வலி, உடல் வலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை மிகவும் கசப்பானது. இந்த முடக்கத்தான் கீரையை பெரும்பாலும் அடை செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால், முடக்கத்தான் கீரை முட்டை பொடிமாஸ் செம ஹெல்த்தி உணவு. மதிய சாப்பாட்டுக்கு சைடு டிஷ் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்.
செம ஹெல்தியான முடக்கத்தான் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
மூட்டு வலி, உடல் வலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை மிகவும் கசப்பானது. இந்த முடக்கத்தான் கீரையை பெரும்பாலும் அடை செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால், முடக்கத்தான் கீரை முட்டை பொடிமாஸ் செம ஹெல்த்தி உணவு. மதிய சாப்பாட்டுக்கு சைடு டிஷ் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்.
Advertisment
முடக்கத்தான் கீரை இது பெரும்பாலும் வயல்வெளிகளில், செம்மண் கொல்லைமேடுகளில், தரிசு நிலங்களில் படர்ந்து கிடக்கும். மிகவும் எளிதாகக் கிடைக்கும் இந்த முடக்கத்தான் கீரை உடல் வலி, மூட்டு வலியைப் போக்கும். மிகவும் கசப்புத் தன்மை கொண்ட இந்த முடக்கத்தான் கீரையை பலரும் பெரும்பாலும் அடை செய்து சாப்பிடுகிறார்கள். இல்லையென்றால், பொரியல், துவையல் செய்து சாப்பிடுகிறார்கள்.
ஆனால், வித்தியாசமாக, லூக்மா சமையல் (Lookma Samayal) யூடியூப் சேனலில், சுவையான முடக்கத்தான் முட்டை பொடிமாஸ் செய்து காட்டியுள்ளனர். இது மதியம் சோறுக்கு சூப்பர் சைடு டிஷ்ஷாக இருக்கும். செம ஹெல்தியான முடக்கத்தான் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
Advertisment
Advertisements
முடக்கத்தான் முட்டை பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை கடுகு 1 டேபிள்ஸ்பூன் சீரகம் 1 டேபிள்ஸ்பூன் முட்டை 3 சமையல் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் நெய் 2 ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2 டேபிள்ஸ்பூன் மிளகு தூல் 1 டேபிள்ஸ்பூன் உப்பு போதுமான அளவு பூண்டு 10 பல்லு பச்சை மிளகாய் 2 வெங்காயம் 2
முடக்கத்தான் முட்டை பொடிமாஸ் செய்முறை:
முதலில் முடக்கத்தான் கீரையை வாங்கி, இலைகளை மட்டும் பறித்து சுத்தம் செய்து, கழுவி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வானலியை எடுத்து, ஸ்டவ்வில் வைத்து, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடுங்கள்.கடுகு பொரிந்ததும், சீரகம் போடுங்கள், பொடியாக நறுக்கிய பூண்டு போடுங்கள், அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் போடுங்கள். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போடுங்கள். நன்றாக வதக்குங்கள். ஒரு கொத்து கருவேப்பிலை போடுங்கள்.
வெங்காயம் வதங்கியதும் 1 ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது முடக்கத்தான் கீரையைப் போடுங்கள். இதனுடன் போதுமான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாக வதக்குங்கள். இதனுடன் 1/2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக வதக்குங்கள். வதக்கும்போது முடக்கத்தான் கீரை வெந்து, கீரையில் இருந்து தண்ணீர் விடும். அந்த தண்ணீர் வற்றிப் போகும் வரை வதக்குங்கள்.
இப்போது இதில் 3 முட்டையை உடைத்து ஊற்றுங்கள். அதனுடன் சிறிது அளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து, மிளகு தூள் சேர்த்து கிளறி விடுங்கள். நன்றாக ஆவி பறக்க வறுத்துக்கொள்ளுங்கள். நன்றாக ட்ரையாக வறுத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் செம ஹெல்தியான முடக்கத்தான் கீரை முட்டை பொடிமாஸ் தயார். இதை மதியம் சாப்பாட்டுக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடுங்கள் ரொம்ப நன்றாக இருக்கும்.