மூட்டு வலி மட்டுமல்லாமல், சளி, இருமல், வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் முடக்கத்தான் கீரை தீர்வு தருகிறது. இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தரும் முடக்கத்தான் கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம். முடக்கத்தான் கீரையில் இடியாப்பம் எப்படி செய்வது என்று சக்கரசாதமும் வடகறியும் யூடியூப் பக்கத்தில் கூறியதாவது,
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை
மிளகு
சீரகம்
இடியாப்ப மாவு
உப்பு
சுடுதண்ணீர்
செய்முறை
முடக்கத்தான் கீரை, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். பின்னர் மாவு பிசைவதற்கு ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவு, உப்பு, அரைத்த கீரை ஆகியற்றை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சுடு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
முட்டி வலி மூட்டு வலிக்கு இதை சாப்பிடுங்க
பின்னர் இதை முறுக்கு அச்சில் போட்டு இடியாப்பம் பிழிந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து தேங்காய் பால் ஊற்றி சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.