இன்றைய சூழலில் பலர் மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இந்தப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், இது போன்ற வலிகளுக்கு மருந்தாக அமையும் முடவாட்டுக் கால் சூப் எப்படி தயாரிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
முடவாட்டுக் கால் கிழங்கு,
இஞ்சி,
பூண்டு,
சின்ன வெங்காயம்,
பச்சை மிளகாய்,
சீரகம்,
மிளகு,
கறிவேப்பிலை,
எண்ணெய்,
கரம் மசாலா,
மஞ்சள் தூள்,
உப்பு மற்றும்
கொத்தமல்லி இலைகள்.
செய்முறை:
முதலில், முடவாட்டுக் கால் கிழங்கின் தோலை சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர், இந்தக் கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி அத்துடன் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
இனி அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். அதில், அரைத்து வைத்த மசாலா சேர்க்க வேண்டும். இத்துடன் கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இது நன்கு கொதித்த பின்னர், வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இறுதியாக சிறிது கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முடவாட்டுக் கால் சூப் தயாராகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.