கிராமத்து கைமணம் மாறாத மூக்குத்தி அவரை பொறியல்: மிஸ் பண்ணாதீங்க   

மூக்குத்தி அவரை உடலுக்கு மிகவும் நல்லது. இந்நிலையில் கிராமத்து மணம் மாறாமல் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.

மூக்குத்தி அவரை

மூக்குத்தி அவரை உடலுக்கு மிகவும் நல்லது. இந்நிலையில் கிராமத்து மணம் மாறாமல் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்

தேவையான பொருட்கள்

மூக்குத்தி அவரை

உப்பு

பஞ்சள் பொடி

சின்ன வெங்காயம்

எண்ணெய்

கடுகு

பச்சை மிளகாய்

தக்காளி

மிளகாய்த்தூள்

துருவிய தேங்காய்

கொத்தமல்லி

செய்முறை : மூக்குத்தி அவரையில், உள்ள மொட்டுகளை நீக்க வேண்டும். தொடர்ந்து அதை நறுக்கிக்கொள்ளவும். ஒரு மண் சட்டியை சுட வைத்து அதில் நறுக்கிய மூக்குத்தி அவரை, உப்பு, தண்ணீர் மஞ்சள் பொடி சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து அதை மூடிவைக்கவும். தொடர்ந்து அதை வடிகட்ட வேண்டும். இனியொரு மண் சட்டியை சூட வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு சேர்க்க வேண்டும். தொடர்ந்து சின்ன வெங்காயம் சேர்த்து, பச்சை மிளகாய் சேர்த்து கிளர வேண்டும். தக்காளி, கருவேப்பிலை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும் வேக வைத்த மூக்குத்தி அவரையை சேர்க்க வேண்டும். தொடர்ந்து துருவிய தேங்காய் சேர்த்து 10 நிமிடங்கள் கிளர வேண்டும் . தொடர்ந்து கொத்தமல்லி சேர்த்து கிளரவும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Mukuthi avarai poriyal recipe

Exit mobile version