குழந்தைகளுக்கு பிடித்தமான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக இருக்கும். மொறு மொறுவென்று சாப்பிடலாம். முறுக்கு காய்கறி சாட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முறுக்கு - தேவையான அளவு
கேரட் - 1
பீட்ரூட் - 1
வெங்காயம் - 1
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
தேங்காய் - சிறிதளவு
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை பாத்திரத்தில் போட்டு அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். இந்த கலவையை அரை மணி நேரத்துக்கு அப்படியே மூடி வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முறுக்கை பொடியாக நொறுக்கிப் போடவும்.
அதனுடன் 2 தேக்கரண்டி சாலட் கலவை (கலந்து வைத்த காய்கறி), 1 டீஸ்பூன் சட்னி சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான 'முறுக்கு காய்கறி சாட் ' ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“