உருளைக்கிழங்கு வைத்து சூப்பர் முருக்கு செய்யலாம். சில பொருட்கள் போதும், இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
2 உருளைக்கிழங்கு ‘
1 கப் கடலை மாவு
அரை ஸ்பூன் மிளகாய் தூள்
பெருங்காயத்தூள்
அரை ஸ்பூன் ஓமம்
தேவையான உப்பு
2 ஸ்பூன் அரிசி மாவு
எண்ணெய்’
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ளவும். தோல் நீக்கியவுடன், அதை மசித்துக்கொள்ளவும். தொடர்ந்து அதில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், ஊற வைத்த ஓமம் சேர்க்கவும். தொடர்ந்து தேவையான அளவு உப்பு, அரிசி மாவு ஆகியவறை சேர்க்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். தொடர்ந்து முருக்கு அச்சில் இந்த மாவை எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெய்யை காய வைக்க வேண்டும். தொடர்ந்து இதில் முருக்கு பிழிய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“