அரை மணி நேரத்தில் முருக்கு செய்ய, இந்த ரெசிபி உங்களுக்கு உதவும்.
தேவையான பொருட்கள்
கால் கப் பொட்டுக்கடலை மாவு
1 கப் அரிசி மாவு
அரை டீஸ்பூன் கருப்பு எள்ளு
கால் டீஸ்பூன் உப்பு
கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
அரை டீஸ்பூன் வெண்ணை
முக்கால் கப் தண்ணீர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துகொள்ளவும். தொடர்ந்து பொட்டுக்கடலையை பொடித்து அந்த மாவையும் இதில் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து அதில் எள்ளு, உப்பு, பெருங்காயம், வெண்ணை சேர்க்கவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து இடியாப்பம் பிழியும் அச்சில் மாவை வைத்து, முருக்குபோல் பிழிந்துகொள்ளவும். தொடர்ந்து இதை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“