Advertisment

ஹெல்த்தியான முருங்கைக் கீரை துவையல்: நடிகை சீதா எப்படி தயார் பண்றார் பாருங்க!

முருங்கைக் கீரை துவையல் செய்வது குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Muru chu

முருங்கைக் கீரையில் அத்தனை சத்துகள் உள்ளது. குறிப்பாக இருப்புச்சத்து அதில் அதிகம் உள்ளது. சுவை, ஆரோக்கியமான  முருங்கைக் கீரையில் துவையல் செய்வது குறித்து பற்றி நடிகை சீதா அவரது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

Advertisment

தேவையானவை

காய்ந்த மிளகாய்
பூண்டு - 4-5 பல்
உளுந்து
எண்ணெய்
தனியா - 1 ஸ்பூன்
உப்பு 
சின்ன வெங்காயம்  
முருங்கைக் கீரை
புளி -  சிறிதளவு 

தாளிக்க

கடுகு, சீரகம்
துவரம் பருப்பு 
கறிவேப்பிலை 

செய்முறை

முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மிளகாய், பூண்டு, உளுந்து, தனியா சேர்க்கவும். அடுத்து சின்ன வெங்காயம்  சேர்த்து வதக்கவும். இதை வதங்கிய பின் முருங்கைக் கீரை சேர்த்து சிறிதளவு புளியும் சேர்த்து வதக்கவும். அதன் பின் தேங்காய் போட்டு கிளறி இறக்கவும். இறக்கிய பின் சிறிது நேரம் ஆற விடவும். 

இப்போது துவையல் தாளிக்க தேவையான பொருட்கள் போட்டு தாளித்து வைக்கவும். இப்போது ஆறிய துவையலை மிக்ஸி, அம்மியில் போட்டு அரைத்து எடுக்கவும்.  கடைசியாக தாளித்த பொருட்களை சேர்த்தால் ஹெல்த்தியான முருங்கைக் கீரை துவையல் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment