முருங்கை கீரை, முருங்கை காய், முருங்கை பூ என முருங்கையின் அத்தனையிலும் சிறப்பு நிறைந்துள்ளது. முருங்கை கீரையில் 96 வகை சத்து, 40க்கும் அதிகமான ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். முருங்கை இரும்புச் சத்துக்கு பெயர் பெற்றது. அந்தவகையில் முருங்கை பூவில் மொறு மொறு வடை செய்வது பற்றி பார்ப்போம்.
முருங்கை பூ- 200 கிராம்
கடலைபருப்பு- 100 கிராம்
துவரம் பருப்பு- 50 கிராம்
உளுந்தம் பருப்பு- 50 கிராம்
பெரிய வெங்காயம்- 2 கப்
பச்சை மிளகாய்- 4
உப்பு- சுவைக்கேற்ப
நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் முருங்கை பூவின் காம்பு நீக்கி அதை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்ததாக, கடலைப் பருப்பு மற்றும் துவரம்பருப்பு இரண்டையும் தனித் தனியாக ஊற வைக்கவும். அதன்பின் ஊற வைத்த பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
முருங்கைப் பூ, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையில் இவற்றை போட்டு உப்பு சேர்த்து பிசையவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வடைகளாக ரவுண்டாக தட்டி, நல்லெண்ணெய்யில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான முருங்கை பூ வடை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“we