முருங்கைக் கீரையில் ஹெல்தி அடை தோசை: 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி

மசூரி பருப்பு முருங்கைக் கீரை அடை தோசை ரெசிபி

மசூரி பருப்பு முருங்கைக் கீரை அடை தோசை ரெசிபி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Murungai

மசூரி பருப்பு, முருங்கைக் கீரை சேர்த்து அடை தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

மசூரி பருப்பு – 250 கிராம்
தோல் சீவிய இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் -2
முருங்கைக் கீரை – 5 கப்
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் – அரை கப்
மிளகு – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 50 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் மசூரி பருப்பை நன்கு கழுவி 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்றாக ஊறிய பருப்பை ஒரு மிக்ஸியில் போட்டு இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். மாவு பதத்திற்கு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

அரைத்த இந்த மாவில் நறுக்கிய கீரை, மல்லி, கறிவேப்பிலை, மிளகு, தேங்காய் துண்டு சேர்த்து கலக்கவும். இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் சிறிது வெண்ணெய் தடவி இந்த அடை மாவை ஊற்றவும். நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வேக விடவும். இருபுறமும் சிவந்து வெந்ததும் எடுக்கவும். அவ்வளவு தான் சத்தான ருசியான மசூரி பருப்பு முருங்கைக் கீரை அடை தயார். இந்த அடையை கீரை சேர்க்காமலும் செய்து சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: