நம்முடைய பாரம்பரிய உணவில் உள்ள மருத்துவ குணங்களை அறிவியல் மொழியில் தொடர்ந்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் மருத்துவர் சிவராமன். முருங்கை கீரையில் பீட்டா கரோட்டின் அதிகம் இருக்கிறது, கேரட்டை விட 1,000 மடங்கு கண்ணுகு சிறந்தது என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். அது என்ன கீரை என்பதைப் பார்ப்போம்.
முருங்கைக் கீரை கிராமப்புறங்களில் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு கீரை. முருங்கை கீரையை, ஒரு குறு மரத்தில் விளையக்கூடிய விட்டமின் மாத்திரை என்று சொல்லலாம், அந்த அளவுக்கு முருங்கை கீரையில் விட்டமின் சத்துகள் பொதிந்து கிடக்கிறது என்கிறார் மருத்துவர் சிவராமன்.
இந்தியாவில் நவீன கல்வி முறையைக் கொண்டுவந்த மெக்காலே பிரபு அவர்கள் நாட்டில் சாப்பிடக்கூடிய கேரட்டை இங்கே அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கண்ணுக்கு நல்லது என்பதால் சி ஃபார் கேரட் என்று அறிமுகப்படுத்தி சென்றிருக்கலாம், ஆனால், கேரட்டை விடல் பல ஆயிரம் மடங்கு நம்ம ஊரில் கிடைக்கும் முருங்கைக் கீரை சிறந்தது என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
கண்களுக்கு நல்ல சத்து வேண்டும் என்றால் பீட்டா கரோட்டின் என்கிற சத்து வேண்டும். அதனுடைய பிரிகாஷியஸாக இருக்கக்கூடிய கரோட்டின் ஆயிட்ஸ் பல ஆயிரம் மடங்கு அதிக அளவில் முருங்கை கீரையில் மட்டும்தான் இருக்கிறது. கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு என எல்லா சத்துக்களும் மற்ற எந்த கீரைகளையும் விட முருங்கை கீரையில் நிறைந்து இருக்கிறது. அதனால், இந்த முருங்கை கீரையை நமது உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
முருங்கை கீரை பல ஆயிரம் மடங்கு சத்துகளைக் கொண்டது மட்டுமல்ல, இந்த முருங்கை கீரை ரத்த அழுத்தத்தைக் கூடாமலும், குறையாமலும் சீராக வைத்திருக்க உதவுகிறது. முருங்கை கீரையில் நார்ச் சத்து நிறைய இருக்கிறது. வேறு எந்த கீரையையும்விட பல பலன்களைக் கொண்ட முருங்கைக் கீரையைக் கண்டிப்பாக வாரத்திற்கு 2-3 நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“