முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. முருங்கையில் சாம்பார், பொறியல் செய்து சாப்பிடலாம். முருங்கைக் கீரையில் சூப் செய்யும் குடிக்கலாம். ஆனால் குழந்தைகள் முருங்கைக் கீரை சாப்பிட அடம் பிடித்தால், அதில் பக்கோடா செய்து கொடுக்கலாம். முருங்கைக் கீரை பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 200 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
முருங்கைக் கீரை – 2 கைப்பிடி அளவு
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
நெய் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக் கீரையை காம்பு இல்லாமல் இலையை மட்டும் எடுத்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் உருக்கிய நெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை, சோம்பு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு இதில் சிறிதளவு நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவு உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும் போது எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான முருங்கைக் கீரை பக்கோடா ரெடி.