Advertisment

நமக்குத் தேவையான ஃபைபர் 30% இதில் இருக்கு: முருங்கைக் கீரை பொரியல்; வெங்கடேஷ் பட் சிம்பிள் ரெசிபி

செஃப் வெங்கடேஷ் பட் கைவண்ணத்தில் முருங்கைக் கீரை பொரியல் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
murungai keerai poriyal recipe by Venkatesh Bhat in tamil

செஃப் வெங்கடேஷ் பட் கைவண்ணத்தில் முருங்கைக் கீரை பொரியல் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.

சமையல் துறையில் வல்லுநராக வலம் வருபவர் வெங்கடேஷ் பட். இந்த துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட இவர், விஜய் டி.வி-யின் பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நடுவராக பங்கேற்றார். இதன் மூலம் இவர் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமானார். தற்போது செஃப் வெங்கடேஷ் பட் டாப் குக்கு டூப் குக்கு டி.வி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார். 

Advertisment

ஒரு ரெசிபியை எப்படி எளிதில் செய்து அசத்தலாம் என்பதை மிக நிதனாமாகவும், தெளிவாகவும் சொல்லி விளங்க வைக்கக் கூடியவராகவும் செஃப் வெங்கடேஷ் பட் இருக்கிறார். தனது யூடியூப் சேனல் மூலமாக தான் கற்ற சமையல் கலையை உலகறிச் செய்து வருகிறார். இவரது ரெசிபிகள் அனைத்தும் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வருகிறது. 

அந்த வகையில், செஃப் வெங்கடேஷ் பட் கைவண்ணத்தில் முருங்கைக் கீரை பொரியல் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
வர மிளகாய் - 5
கடுகு - 1 டீஸ்பூன் 
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை - ஒரு கொத்து 
பெரிய வெங்காயம் - 2 
பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைத்தது) 
உப்பு 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன் 
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன் 

நீங்கள் செய்ய வேண்டியவை: 

முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அதனுடன், வர மிளகாய், கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்து வந்தவுடன் பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்த பிறகு அவற்றுடன், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து கிளறவும். பிறகு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். 

இதன்பின்னர், நன்கு கழுவி வைத்து முருங்கை இலைகளை சேர்த்து வதக்கவும். அவை நன்கு வேகும் வரை தொடர்ந்து வதக்கிக் கொண்டே இருக்கவும். விருப்பம் உள்ளவர்கள் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். இப்படியாக வதக்கி கீழே இறக்கினால், நீங்கள் எதிர்பார்த்த முருங்கைக்கீரை பொரியல் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment