முருங்கைப் பூ தயிர் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கைப்பூ – 1 கப்
தயிர் – ½ கப்
தேங்காய்துருவல் – ½ கப்
சீரகம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை – 4
செய்முறை
முதலில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை போடவும். கடுகு வெடித்ததும், முருங்கை பூவைப் போட்டு சிறிது உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பூ வெந்ததும் அரைத்த விழுதை போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து இந்த கலவை ஆறியதும் தயிர் கலந்து மீதி உப்பு சேர்த்து பரிமாறவும். அவ்வளவு தான் சத்தான முருங்கைப்பூ தயிர் பச்சடி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“