சுவையான காளான் சான்விட்ச் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் – 200 கிராம்
கோதுமை பிரட் – 4
வெங்காயம் – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – சிறிதளவு
கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – சிறிதளவு
கொத்துமல்லி – சிறிதளவு
வெண்ணெய்- 100 கிராம்
செய்முறை
முதலில் காளான், வெங்காயம், மிளகாய், கொத்துமல்லித் தழைகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை மிக்ஸியில் லேசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் விட்டு, வெங்காயம், பூண்டு விழுதை வதக்கிக் கொண்டு, அதனுடன் காளான், பச்சை மிளகாய், மசாலாத்தூள் போட்டு வதக்கி, தேவையான அளவு உப்பு, கொத்துமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
இந்த கலவையை கோதுமை பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான காளான் சான்விட்ச் தயார். காளானில் நார்ச்சத்து, செலீனியம், வைட்டமின் சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“