குளு குளு வெயிலுக்கு ஏற்ற முழாம்பழம் ஃபலூடா வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். வீட்டில் உள்ள பொருட்கள் மட்டும் போதும். ஈஸியான ஃபலூடா செய்வது பற்றி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
முலாம்பழம் - 1
சர்க்கரை - 2 தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள்
சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி
வேகவைத்த சேமியா
வெண்ணிலா ஐஸ்கிரீம்
பிஸ்தா
பாதாம்
செய்முறை:
சப்ஜா விதைகளை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். சேமியாவை சமைத்து தனியாக வைக்கவும். விதைகளை நீக்கி, முலாம்பழத்தின் தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அனைத்து முலாம்பழ துண்டுகளையும் மிக்ஸி ஜாரில் போடவும். மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிருதுவான ஜூஸாக அரைக்கவும்.
முலாம்பழ ஃபலூடா | Muskmelon Falooda In Tamil | Refershing Drinks | Dessert Recipes | Falooda Recipes
ஃபலூடாவை அசெம்பிள் செய்ய, ஒரு உயரமான கண்ணாடியை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறவைத்த சப்ஜா விதைகளை கண்ணாடியின் அடிப்பகுதியில் வைக்கவும். பின்பு அதில் சமைத்த சேமியாவை சேர்க்கவும்.
முலாம்பழ சாற்றை ஊற்றி மேலே, வெண்ணிலா ஐஸ்கிரீமை ஒரு ஸ்கூப் வைக்கவும். பின்னர் மேலே நறுக்கிய உலர் பழங்களை ஐஸ்கிரீம் மேல் தூவினால் அவ்வளவு தான் அற்புதமான முலாம்பழம் ஃபலூடா ரெடி.