scorecardresearch

இந்த விதைகளை மட்டும் சாப்பிடாம ஒதுக்கீருப்பீங்க: அதுலதான் அவ்ளோ சத்து இருக்கு பாஸ்

கிரிணிப்பழ விதைகளில், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னிசியம் இருப்பதால் இது நமது எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

கிரிணிப்பழம்
கிரிணிப்பழம்

கிரிணிப்பழத்தில் அதிக நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக கிரிணிப் பழத்தில் இருக்கும் நீர் சத்து, உடல் வரட்சியை தடுக்கும். இநிந்லையில் இதன் விதைகள் அதிக சத்துக்களை கொண்டது.

கிரிணிப் பழ விதைகளில் இருக்கும் சத்துக்களை தெரிந்துகொள்வோம். இதில் அதிக புரோட்டீன் சத்து இருக்கிறது.  நமது சதைகளை உருவாக்குவதில் புரத சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தாவரவகை புரத சத்தில் இந்த விதைகள் சிறந்தது.

மேலும் இதில் நார்சத்து இருக்கிறது. இந்த நார்சத்து மலம் கழிப்பதில் உள்ள சிக்கலை குறைக்கிறது. இது ஜீரண ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது ஜீரணத்தை கூடுதல் வேகமாக்குகிறது மேலும் ரத்த சர்க்கரை அளவை  சீராக்குகிறது.

மெழுகு போல, வழவழப்பான தன்மை கொண்ட பொருளான கொலஸ்ட்ராலை நமது கல்லீரல் உற்பத்தி செய்கிறது. இந்த கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான பல்வேறு விஷயங்களை செய்ய உதவுகிறது. ஆனால் இதன் அளவு அதிகரித்தால்,  மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படலாம். இந்நிலையில் கிரிணிப் பழ விதைகள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

இந்த விதைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் அது வீக்கத்தை குறைக்கும். சளி மற்றும் ப்ளூ  காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க. இதில் இருக்கும் வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கிரிணிப்பழ விதைகளில், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னிசியம் இருப்பதால் இது நமது எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

கூடுதலாக இதில் இருக்கும் வைட்டமின் இ, நமது சருமத்தை சேதமடைவதிலிருந்து மீட்கிறது.

எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

கிரிணிப்பழ விதைகளை நன்றாக 15 நிமிடங்கள் வறுத்து பிறகு சாப்பிட்டால் எளிதாக ஜீரணிக்கும். இதை நாம் நன்றாக பொடித்து ஓட்ஸ், தயிர், ஸ்மூத்தி உடன் சேர்த்து சாப்பிடலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Muskmelon seeds health benefits and goodness

Best of Express