பாய் வீட்டு பிரியாணி என்றாலே மணந்தான். ஆனால் அந்த பிரியாணியை எல்லோராலும் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட பாய் விட்டு பிரியாணி செய்வதற்கான மசாலா எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி
சோம்பு
சீரகம்
மிளகு
கிராம்பு
ஏலக்காய்
பெரிய ஏலக்காய்
ஸ்டார் பூ
பட்டை
ஜாதிபத்திரி
மராத்தி மொக்கு
ஜாதிக்காய்
கல்பாசி
பிரியாணி இலை
ரோஜா இதழ்
ஒரு கடாயில் இந்த பொருட்கள் அனைத்தையும் தனித்தனியே ஒரு 2 நிமிடம் வறுத்து எடுக்க வேண்டும். இதில் சோம்பு,சீரகம் இரண்டையும் சேர்த்து ஒன்றாக வறுக்க வேண்டும். சுருள்பட்டை மற்றும் நாட்டுப்பட்டை இரண்டையும் சேர்த்து ஒன்றாக வறுக்க வேண்டும்.
அனைத்து பொருட்களையும் வறுத்து ஆறவைத்த பின்னர் ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மராத்தி மொக்கு மற்றும் பெரிய ஏலக்காய் அறுபடாது எனவே உடைத்தோ நுனுக்கியோ சேர்த்து நல்ல மைய அரைத்து எடுத்து கொள்ளவும்.
அரைத்த மசாலாவில் ஈரக் கைப்படக் கூடாது, எனவே ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து ஸ்பூன் போட்டு பயன்படுத்தலாம். இந்த மசாலாவை பிரியாணி சமைக்கும்போது வெங்காயம், தக்காளி வதக்கும்போது சேர்க்க வேண்டும்.
காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டால் ஒரு வருடம் வரை கெட்டுப்போகாமல் நல்ல மணமுடன் இருக்கும். இந்த மசாலா இருக்கும் போது கடையில் இருந்து மசாலா வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஒரு மசாலா போதும் பிரியாணி, கறி குழம்பு, கறி வறுவல், குருமா போன்ற அனைத்தும் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“