நெஞ்சு சளி மற்றும் நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் முசுமுசுக்கை கீரையை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் கற்பகம் கூறுகிறார். இதுகுறித்து டாக்டர் கார்த்திகேயன் யூடியூப் பக்கத்தில் சித்த மருத்துவர் கூறியிருப்பதாவது,
முசுமுசுக்கை இலையும், தண்டுகளும் சற்று சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளை சுற்றி சுனைகளோடு செடி, மரம், சுவர்களில் பற்றி வளரும். இவற்றின் இலை மற்றும் வேரில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. முசுமுசுக்கை கீரை உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடியது.
முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் சி போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன.
முசுமுசுக்கை கீரையை உணவில் சேர்த்து கொண்டால் நெஞ்சு சளி, கோழை, தும்மல் ஆகிய பிரச்சினைகள் சரியாகும். மேலும் இது மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
மேலும் முசுமுசுக்கை கீரையானது நோயால் பாதிக்கப்பட்ட உடலை வலுபெறச் செய்யும். காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு ஏற்படும் வாய் கசப்பை போக்கும். மேலும் வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கும் சரி செய்யும்.
முசுமுசுக்கை மூலிகை கீரை பயன்கள் | dr karthikeyan tamil
எனவே இதனை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். முசுக்கை இலையை அரைத்து சாறு எடுத்து தோசை மாவில் கலந்து தோசை ஊற்றி சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.