Advertisment

மதுரை ஸ்பெஷல் முட்டை கொத்து இட்லி: சும்மா டேஸ்ட் தூக்கலா இருக்கும்  

கொத்து புரோட்டாவில் மைதா மாவு இருப்பதால் அது உடலுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தாது. இதற்கு மாற்றாக நாம் கொத்து இட்லியை சாப்பிடலாம்

author-image
WebDesk
New Update
முட்டை இட்லி கொத்து

இந்த முட்டை கொத்து இட்லி செய்வது மிகவும் சுலபமாக செய்யலாம். கொத்து புரோட்டாவில் மைதா மாவு இருப்பதால் அது உடலுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தாது. இதற்கு மாற்றாக நாம் கொத்து இட்லியை சாப்பிடலாம்

Advertisment

செய்முறை

இட்லி – 10 இட்லிகள்

2 பெரிய வெங்காயம் நறுக்கியது

ஒரு தக்காளி நறுக்கியது

மூன்று முட்டை

மிளகாய் பொடி

மஞ்சள் பொடி

சோம்பு அரை டீஸ் பூன்

மிளகுத் தூள்

கொத்தமல்லி

 கருவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை: இரு இரும்பு சட்டியியை நன்றாக சூடு செய்ய வேண்டும். தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி உப்பு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து இதை ஒன்றாக சேர்க்கவும். முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். இப்போது கரண்டியை வைத்து நன்றாக கலந்துவிடவும். தொடர்ந்து உதிர்த்துவைத்திருந்த இட்லியை சேர்த்து கிண்டவும். தற்போது இரண்டு கரண்டிகளை வைத்து கொத்து புரோட்டா செய்வது போல், நன்றாக கொத்தி எடுக்க வேண்டும். கடைசியாக மிளகு தூள் சேர்த்து மீண்டும் கொத்தி எடுக்க வேண்டும். வேண்டும் என்றால் சால்னா சேர்த்துக்கொள்ளாலம். கடைசியாக உப்பு சரிபார்த்து வேண்டும் என்றால் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment