ஓட்டலில் இதை செய்ய ஒன்றரை மணி நேரம் ஆகும்; நீங்க 20 நிமிசத்துல செஞ்சு அசத்தலாம்: செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி
ரெஸ்டாரன்ட்களில் ரொம்ப ஃபேமஸ் இந்த மட்டர் பன்னீர் என்று கூறும் பிரபல சமையல் கலைஞர் செஃப் வெங்கடேஷ் பட், பச்சை பட்டாணி மற்றும் பன்னீர் சேர்த்து செய்யப்படும் மட்டர் பன்னீர் ஜட்கா செய்வது எப்படி என்று செய்து காட்டியுள்ளார்.

இந்த மட்டர் பன்னீர் டிஷ் ஓட்டலில் செய்ய ஒன்றரை மணி நேரம் செலவாகிறது, ஆனால், ஒரு 20 நிமிடத்தில் மட்டர் பன்னீர் ஜட்காவை செஃப் வெங்கடேஷ் செய்து காட்டியுள்ளார்.
ரெஸ்டாரன்ட்களில் ரொம்ப ஃபேமஸ் இந்த மட்டர் பன்னீர் என்று கூறும் பிரபல சமையல் கலைஞர் செஃப் வெங்கடேஷ் பட், பச்சை பட்டாணி மற்றும் பன்னீர் சேர்த்து செய்யப்படும் மட்டர் பன்னீர் ஜட்கா செய்வது எப்படி என்று செய்து காட்டியுள்ளார்.
Advertisment
இந்த மட்டர் பன்னீர் டிஷ் ஓட்டலில் செய்ய ஒன்றரை மணி நேரம் செலவாகிறது, ஆனால், ஒரு 20 நிமிடத்தில் மட்டர் பன்னீர் ஜட்காவை தனது யூடியூப் சேனலில் செஃப் வெங்கடேஷ் செய்து காட்டியுள்ளார்.
மட்டர் பன்னீர் ஜட்கா செய்முறை:
இது 4 பேருக்கு 1 வேளைக்கு சாப்பிடும்படியான மட்டர் பன்னீர். அதனால், அளவு இப்படி இருக்கட்டும். ஸ்டவ்வைப் பற்ற வைத்துக்கொள்ளுங்கள். அதன் மீது ஒரு பாத்திரைத்தை வையுங்கள், அதில் 3 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றுங்கள்.
Advertisment
Advertisements
அதில் 2 துண்டு பட்டை, 4 ஏலக்காய், 3-4 கிராம்பு போடுங்கள். அதற்கு மேல் போடாதீர்கள். 2 பெரிய வறுந்ததும், பெரிய வெங்காயம் 2 நறுக்கிப் போடுங்கள். வெங்காயம் பொன்னிறமாக மாறும் படி வதக்குங்கள். 1 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போடுங்கள். நன்றாகக் கலக்கிவிடுங்கள். நன்றாக பொன்னிறமாக வதக்குங்கள். 3 தக்காளியை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சேருங்கள். தீயை மிதமாக வைத்துக்கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 1/2 டீஸ்பூன் கஷ்மீரி மிளகாய் தூள் போடுங்கள், அதே டீஸ்பூனில் கோபுரம் மாதிரி தனியா தூள் போடுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். தேவை என்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் சேர்ந்து 10 நீமிடம் வேக வையுங்கள்.
கிரேவி மாதிரி வரும் நிலையில், கழுவி வைத்திருக்கும் பச்சைப் பட்டாணியைப் போடுங்கள். அடுத்து கட் பண்ணி வைத்திருக்கிற பன்னீர் க்யூப்ஸ் போடுங்கள். கலக்கிவிடுங்கள். பால் ஏடு மலாய் 75 கிராம் முதல் 100 கிராம் வரை போடுங்கள். நன்றாகக் கலக்கி்விடுங்கள்.
இப்போது இறக்குவதற்கு முன்னால், அரை டீஸ்பூன் கரம் மசாலாதூள் போடுங்கள், ஒரு கை கொத்தமல்லி இலை, கசூரி மேத்தி இலை ஒரு சிட்டிகை கலக்குங்கள், அதனுடன் 100 மி.லி தண்ணீர் ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் ஸ்டவ்வை ஆஃப் செய்துவிடுங்கள். அவ்வளவுதான் மட்டர் பன்னீர் கிரேவி தயார். இது சப்பாத்தி, ரொட்டி, புல்கா போன்ற உணவுகளுக்கு நல்ல டிஷ்ஷாக இருக்கும்.