நீங்கள் மாதம்பட்டி ரங்கராஜ் சொல்வது போல் மட்டன் கோலா உருண்டை செய்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
3 ஸ்பூன் பொட்டுக்கடலை
12 முந்திரி
அரை ஸ்பூன் சோம்பு
கால் ஸ்பூன் சீரகம்
கால் ஸ்பூன் கசகசா
பெரிய துண்டு இஞ்சி
10 சின்ன வெங்காயம்
1 பச்சை மிளகாய்
300 கிராம் மட்டன்
அரை ஸ்பூன் மிளகாய் தூள்
கொஞ்சம் மஞ்சள் தூள்
கொஞ்சம் உப்பு
2 ஸ்பூன் பொட்டுக்கடலை பவுடர்
கருவேப்பிலை நறுக்கியது
கொத்தமல்லி நறுக்கியது
பொறிக்கும் அளவிற்கு எண்ணெய்
செய்முறை : முதலில் மிக்ஸியில் பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பும், சீரகம், கசகசா சேர்த்து அரைத்துகொள்ளவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொத்து கரியாக வாங்கிய மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து அதில் அரைத்த சின்ன வெங்காய இஞ்சி கலவையை சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் தூள் சேர்த்து கிளரவும். இதை மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். தொடந்து ஒரு பாத்திரத்தில், மட்டன் அரைத்தது, இஞ்சி, வெங்காயம் அரைத்ததில் மிச்சம் இருப்பது, பொட்டுக்கடலை பொடி, முந்திரி- சோம்பு அரைத்தது, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கிளரவும். கையில் எண்ணெய் தடவி சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.