Advertisment

கிராமத்து ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு கிரேவி: இப்படி செய்து பாருங்க

மட்டன் நல்லி எலும்பை வைத்து, இந்த பிரட்டல் அல்லது கிரேவி செய்து பாருங்க. இந்த ரெசிபி செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நல்லி எலும்பு கிரேவி

நல்லி எலும்பு கிரேவி

மட்டன் நல்லி எலும்பை வைத்து, இந்த பிரட்டல் அல்லது கிரேவி செய்து பாருங்க. இந்த ரெசிபி செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

2 கிலோ மட்டன் நல்லி எலும்பு

சோம்பு

மிளகு

சீரகம்

இஞ்சி

கொத்தமல்லி

10 வரமிளகாய்

10 சின்ன வெங்காயம்

பட்டை, லவங்கம்

7 பச்சை மிளகாய்

ஒரு தக்காளி

பூண்டு

பெரிய வெங்காயம் நறுக்கியது

கருவேப்பிலை

செய்முறை: ஆட்டின் நல்லி எலும்பை மண் சட்டியில் போட்டு, அதில் மஞ்சள் பொடி, உப்பு நன்றாக கலந்துவிட வேண்டும். தொடர்ந்து அதில தண்ணீர் சேர்க்க வேண்டும். தொடர்ந்து இந்த பானையை மூடி விடவும்.  அம்மியில் இஞ்சி, பட்டை, லவங்கம் சேர்த்து அரைக்கவும். தொடர்து மிளகு, சீரகம் அதில் சேர்த்து அரைக்கவும். தொடர்து இதில் பூண்டு சேர்த்து அரைக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து அம்மியில் வரமிளகாய், கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும். இப்போது நல்லி எலும்பு நன்றாக வெந்திருக்கவும்.  தற்போது வேறு ஒரு சட்டியை எடுத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். தொடர்ந்து அதில் சோம்பு சேர்க்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயத்தை நாம் சேர்த்து கொள்ள வேண்டும்.

தொடர்து பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பட்டை- லவங்க மசாலா அரைத்ததை நாம் முதலில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து பச்சை மிளகாய்யை சேர்க்கவும். தொடர்ந்து கறிவேப்பிலையை சேர்க்கவும். இதை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து வரமிளகாய்- கொத்தமல்லி அரைத்ததை சேர்க்கவும். இதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து சிறிது உப்பு சேர்க்கவும். தொடர்து நல்லி எலும்பை சேர்த்து வதக்க வேண்டும். சுமார் ஒரு 15 நிமிடங்கள் கிளர வேண்டும். கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment