ஆரோக்கிய உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு உணந்தது. அசைவம் பலரும் விரும்பி சாப்பிடுவர். மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்டவற்றை விரும்பி சாப்பிடுவர். இறைச்சியில் சத்து உள்ளது. மருத்துவர்களும் சில நேரங்களில் இறைச்சி உட்கொள்ள அறிவுறுத்துவர். அந்தவகையில் சத்து நிறைந்த நல்லி எலும்பு சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். நல்லி எலும்பு சூப் உடலுக்கு வலிமை தரும். காய்ச்சல், உடல் வலியின் போது எடுத்துக் கொள்வது உகந்தது.
தேவையான பொருட்கள்
நல்லி எலும்பு - கால் கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள் - 1/4 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
இஞ்சி. பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு - தேவையான அளவு
செய்முறை
முதலில் நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது அடுப்பில் குக்கர் வைத்து நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சிறிது கொத்தமல்லி இலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின்னர் சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலந்து குக்கரை மூடி வைக்கவும். 30 நிமிடங்கள் வரை விசில் போட்டு வேக வைக்கவும். இப்போது கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும். இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி இலை சேர்க்கவும். கடைசியாக மட்டன் சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான் காரசாரமான நல்லி எலும்பு சூப் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/