மைசூர்பாகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. வாயில் வைத்ததும் கரையக்கூடிய மைசூர்பாக்கு அதுவும் பிரஷர் குக்கரில் வீட்டில் எளிதில் செய்யலாம். வெறும் 3 பொருட்கள் போதும். பதம் தேவையில்லை சர்க்கரை தேவையில்லை. எளிதாக செய்து விடலாம்.
இதனை எப்படி செய்வது என்று சூப்பர் கிச்சன் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது,
தேவையான பொருட்கள்
கடலை மாவு
ரீபைண்ட் ஆயில்
நெய்
தேவையான அளவு ஒரே கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும்.
செய்முறை
நெய் மற்றும் ரீபைண்ட் ஆயில் இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும். அதில் தேவையான அளவு கடலை மாவு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பின்னர் வெல்லம் எடுத்து கரைத்து விடவும். வெள்ளக்கரைசலை குக்கரில் வடித்து சேர்க்கவும். பின்னர் அதில் கடலை மாவு கரைத்த பாத்திரத்தை மூடி போட்டு வைக்கவும். குக்கரில் 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
அடடா இது தெரியாம போச்சே குக்கர் இருந்தா போதும் ! வாயில் கரையும் மைசூர் பாக் ரெடி/Mysore pak
பின்னர் கடலை மாவு கரைசலை எடுத்து வெள்ள பாகில் கரைத்து மீதமுள்ள எண்ணெய், நெய் கலவையையும் சேர்த்து கரைத்து விடவும். பின்னர் எண்ணெய் பிரியும்போது தொடர்ந்து கிளறவும்.
நுரைந்த்து பொங்கி மடிப்பு மடிப்பாக வரும் பதத்தில் இதை எண்னெய் தடவிய ஒரு கிண்னத்தில் மாற்றி ஆறவிட்டு கத்தியால் வெட்டி எடுக்கவும்.