நாகர்கோயில் ஸ்பெஷல் அவியல். எல்லா காய்கறிகளையும் போட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மாங்காய்
வாழைக்காய்
முருங்கைக்காய்
கேரட்
பீன்ஸ்
கத்திரிக்காய்
வெள்ளரிக்காய்
புடலங்காய்
கருணைக்கிழங்கு - இதை உப்பு போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.
வெள்ளை பூசணிக்காய்
சின்ன வெங்காயம்
எண்ணெய்
சீரகம்
பூண்டு
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
தேங்காய்
மிளகாய் தூள்
கடுகு
கருவேப்பிலை
செய்முறை
முதலில் காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். பின்பு காய்கறிகளை கடாயில் போட்டு அரை கப் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
இதற்கிடையில் மசாலாவை அரைத்து கொள்ளவும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்து அரைக்கவும்.
Nagercoil spl avial | Healthy recipe
இதை அரைக்கும் போது சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் மாதிரி அரைத்து அதை வேக வைத்த காய்கறிகளில் சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு கலந்து விட வேண்டும்.
மேலே கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இது சுவையை கூட்டிக்கொடுக்கும். மசாலா, காய்கறிகளுடன் சேர்ந்து நன்கு வெந்து அவியல் பதத்திற்கு வந்ததும் இறக்கினால் போதும் சுவையான நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல் தயார்.
இந்த முறையை பின்பற்றினாலே போது நாகர்கோவில் அவியல் இனி உங்கள் வீட்டில் சுவையாக செய்யலாம்.