நாகர்கோயில் பக்கம் எல்லாம் டீக்கடைகளிலும் கிடைக்கும் உள்ளி வடை எப்படி செய்வது என்று மிதுனாஸ் கிச்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
ஈவ்னிங் டைம்ல டீ குடிக்கும் போது இந்த மாதிரி உள்ளி வடை செய்து சாப்பிடுவது சுவையாக இருக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கும்.
வெங்காயம்
இஞ்சி
மிளகாய்த்தூள்
கொத்தமல்லி தழை
கருவேப்பிலை
பச்சை மிளகாய்
சோம்பு
அரிசி மாவு
கடலை மாவு
உப்பு
எண்ணெய்
செய்முறை
வெங்காயத்தை நறுக்கி உப்பு சேர்த்து அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ளவும். வெங்காயம் நன்கு மெதுவாக வந்துவிடும்.
பின்னர் அதில் நறுக்கிய கருவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, கடலை மாவு, தேவையான அளவு உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து சூடான எண்ணெயில் போட்டு சுட்டு எடுத்தால் அவ்வளவுதான் நாகர்கோவில் ஸ்டைலில் உள்ளி வடை ரெடியாகிவிடும்.