மாதம்பட்டி ரங்கராஜின் ஸ்பெஷல் ரெசிபிக்களில் நண்டு ரசமும் ஒன்று. நீங்களும் ஈசியா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
அரை டீஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் மிளகு
4 பூண்டு
10 சின்ன வெங்காயம்
ஒரு எலுமிச்சை அளவு புளி
2 தக்காளி
2 நண்டு
2 ஸ்பூன் எண்ணெய்
1 கொத்து கருவேப்பிலை
பெருங்காயத்தூள்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
உப்பு
செய்முறை : நண்டை நாம் சுத்தம் செய்து எடுக்கவும். அதன் கால் பகுதி மற்றும் உடல் பகுதியை பிரித்து எடுக்கவும். வேண்டும் என்றால் இதை இடித்துகொள்ளலாம். மிக்ஸியில் மிளகு , சீரகம் சேர்த்து அரைத்துகொள்ளவும். இத்துடன் சின்ன வெங்காயம் , பூண்டு சேர்த்து அரைத்துகொள்ளவும். புளி தண்ணீரை எடுத்து அதில், தக்காளியை சேர்த்து பிசைந்து கலந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். நண்டுகளை சேர்த்து கிளரவும். தொடர்ந்து புளி – தக்காளி கரைத்ததை சேர்க்கவும். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“