Advertisment

இதுதான் அளவு: சுவையான நார்த்தங்காய் பச்சடி இப்படி செய்யுங்க

சுவையான நார்த்தங்காய் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Narthangai pachadi

Narthangai pachadi

சுவையான நார்த்தங்காய் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

நார்த்தங்காய் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தேவையான அளவு

நறுக்கிய நார்த்தங்காய் – 1 கப்

வெல்லம் – ½ கப்

புளிக்கரைசல் – ½ கப்

பச்சைமிளகாய் – 4

காய்ந்தமிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு

கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

தனியா – 1 ஸ்பூன்

தாளிக்க

கடுகு – 1 ஸ்பூன்

எண்ணெய் – 6 ஸ்பூன்

பெருங்காயம் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 10

செய்முறை

முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து நார்த்தங்காயை போட்டு நன்கு வதக்கவும். பச்சை மிளகாயும் நறுக்கி வதக்கவும்.

இவை வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். அவ்வளவு தான் ருசியான நார்த்தங்காய் பச்சடி தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment