மிகவும் ஈசியாக வெறும் 1 மணி நேரத்தில் செய்யக்கூடிய நாட்டு கோழி கார வதக்கல்.
தேவையான பொருட்கள்
நாட்டு கோழி- ½ கிலோ
பெரிய வெங்காயம்- 2
சீரகத்தூள்- ½ டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்- ½ டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள்- ½ டேபிள் ஸ்பூன்
கரம் மாசாலா- ½ டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள்- 1 டேபிள் ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி- 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது
எண்ணெய்
வெண்ணை
கொத்தமல்லி
உப்பு
செய்முறை :
ஒரு குக்கரில், சிக்கனை சுத்தும் செய்து துண்டுகளாக வெட்டி போடுங்கள். எண்ணெய் ஊற்றுங்கள். அதில் நறுக்கிய வெங்காத்தை சேர்த்து கொள்ளுங்கள், தொடர்ந்து எல்லா வகையான தூளையும் சேர்த்து உப்பு சேர்த்துக்கொளுங்கள். தொடர்ந்து உப்பு மற்றும் தண்ணீர் விட்டு, 3 விசில் வரும் வரை வைத்து எடுங்கள். தொடர்ந்து இந்த கிரேவி மட்டும் சிக்கனை தனியாக எடுத்து, ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்த்து, இதை சேர்த்து வதக்க வேண்டும். கிரேவி மற்றும் சிக்கன் ஒன்றாக கலந்து வந்ததும் கொத்தமல்லி நறுக்கி சேர்த்து பரிமாறவும்.