உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து, உடல் எடையை நிர்வாகிக்கவும், மூளையின் செயல் திறனை மேம்படுத்தவும், செரிமானத்தை தூண்டவும் என இவற்றிற்கு எல்லாம் ஒரு எளிய, இயற்கையான தீர்வாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. ஆனால் இதை எப்போது? எப்படி? எவ்வளவு? பயன்படுத்த வேண்டும் என்ற உங்களுடைய சந்தேகங்களுக்கு டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கான முக்கிய வழிமுறைகள்:
1. வெறும் வயிற்றில் தினமும் காலை நேரத்தில்
ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை லைட் ஹீட் செய்து கொள்ளவும். அதன் பின்பு, இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீர் குடிக்கவும். 30-45 நிமிடங்களுக்குப் பிறகு மட்டுமே காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
2. தினசரி உணவில் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்
சாம்பார், கூட்டு, துவரம் பருப்பு போன்ற பாரம்பரிய உணவுகளில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்க்கலாம். சுடு சாதத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை கலந்து சாப்பிடலாம்.
3. காபி/ஹெர்பல் டீ-யில் சேர்த்து எடுக்கலாம்
உணவுக்குள் கொழுப்பை அடக்கும் “Bulletproof coffee” போன்று உங்கள் ஹெர்பல் டீ/காபியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அருந்தலாம்.
4. மெல்லமெல்ல அளவைக் கூட்டுங்கள்
முதலில் ஒரு டீஸ்பூனிலிருந்து துவங்கி, 2 டேபிள்ஸ்பூன் வரை வளர்த்துக்கொள்ளலாம் (1-2 மாதங்களில்).
5. விருப்பமுள்ளவர்கள் இரவு உணவிற்குப் பிறகும் எடுத்துக்கொள்ளலாம்
இரவில் லைட் உணவிற்குப் பிறகு, ஒரு ஸ்பூன் எண்ணெய் எடுத்துக்கொள்வது இரவு பசிகுறைக்கும்.
பயன்கள்: தேங்காய் எண்ணெய் உடலை உள்ளிருந்து சுத்தம் செய்திடும் , எடை குறைத்திடும் சக்தி மேலும் சருமத்தை இயற்கையாக பாதுகாக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.