வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு டாக்டர் ஜெயரூபா டிப்ஸ்
பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிடாய் முன்பும், ஓவுலேஷன் காலத்திலும், கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆனால், சில சமயங்களில் இது உடல்நல பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
Advertisment
வெள்ளைப்படுதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன? எந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும்? இதை தீர்க்க இயற்கையான வழிகள் என்ன? என்பதை பற்றி மருத்துவர் ஜெயரூபா ஸ்ரீ வர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
இதில் வெள்ளைப்படுதலின் காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள் பற்றிய தகவல் மேலும், கீழாநெல்லியின் மருத்துவ பயன்களை பற்றி மருத்துவர் ஜெயரூபா விளக்கி கூறுகிறார்.
நீரிழிவு, ஈஸ்ட் இன்ஃபெக்ஷன், பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் போன்ற காரணங்களால் வெள்ளைப்படுதல் ஏற்படும்.
Advertisment
Advertisements
வெள்ளைப்படுதலை தடுக்க செய்ய வேண்டியவை:
கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்துதல் ஹார்மோன் சமநிலையை கடைபிடிக்க வேண்டும்.
வெள்ளைப்படுதல் குறைய கீழாநெல்லி எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
கீழாநெல்லி வேருடன் சுத்தமாக கழுவி அரைத்துக் கொள்ளவும் அதனுடன் மோர் சேர்த்து, காலை வெறும் வயிற்றில் குடிக்கவும் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறைய வாய்ப்பு உள்ளது ஆவியில் வேகவைத்த உணவுகள், குறைந்த அளவில் காரம் மற்றும் புளி சேர்க்கவும்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.