இயற்கை வயாகரா... தென் ஆப்பிரிக்காவில் ரொம்ப பேமஸ்; உங்க வீட்டுல இப்படி ரெடி பண்ணுங்க: டாக்டர் யோக வித்யா

உடலுறவு கொள்வதற்கு முன்பாக சில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய விறைப்புத்தன்மையை நீண்ட நேரத்திற்கு வைத்திருக்க முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

உடலுறவு கொள்வதற்கு முன்பாக சில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய விறைப்புத்தன்மையை நீண்ட நேரத்திற்கு வைத்திருக்க முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viagra drink

உடலுறவு வைத்துக் கொள்வதற்கு ஆண்களைப் பொறுத்தவரை விறைப்புத்தன்மை மிக முக்கியம். இதற்காக சிலர் வயாகரா எடுத்துக் கொள்வார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட பானத்தை குடிப்பதன் மூலம் நீண்ட நேரத்திற்கு விரைப்புத்தன்மையை பராமரிக்க முடியும் என்று மருத்துவர் யோக வித்யா கூறினார். இது தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான ஜூஸ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அந்த வகையில், தர்பூசணி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தோலுடன் சேர்த்து அரைத்து சாறு தயாரிக்கலாம். இந்த பானத்தை குடிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இதனால் நீண்ட நேரம் விறைப்புத்தன்மை நீடிக்கும். இதன் மூலம் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார்.

அதேபோல், தினமும் வெண்பூசணியை இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கலாம். வெண்பூசணிக்கு இயற்கையாகவே காமத்தை தூண்டும் சக்தி இருப்பதால், இது நீண்ட நேர உடலுறவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், உடலுறவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பாலில் ஜாதிக்காய் பொடி மற்றும் கசகசா சேர்த்து அருந்தலாம். இந்த பொருட்களுக்கு காமத்தை தூண்டும் சக்தி இருப்பதாக மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். கூடுதலாக, இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி, அவற்றை கெட்டியாக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.

Advertisment
Advertisements

தினமும் காலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீரை குடிப்பதும் உடலுக்கு நல்லது. இது உடலின் சூட்டை தணித்து நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். அதன்படி, நீடித்த உடலுறவுக்கு இதுவும் உதவும். இந்த இயற்கையான பொருட்களை சரியான விதத்தில் உட்கொள்வதன் மூலம் உடலுறவு நேரத்தை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார்.

நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to improve sexual health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: