இமய மலையில் எடுத்த இயற்கை வயாகரா... முட்டையுடன் சேர்த்து 40 நாள் இப்படி சாப்பிடணும்: டாக்டர் யோக வித்யா!
ஆண்களின் விந்தணுக்களின் ஆற்றலை அதிகரிக்க உதவும் ஒரு பொருள் குறித்து மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்களின் விந்தணுக்களின் ஆற்றலை அதிகரிக்க உதவும் ஒரு பொருள் குறித்து மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்று அனைத்து ஆண்களும் நினைப்பார்கள். ஆனால், இதற்கான வழிமுறைகள் குறித்து பலருக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும்.
Advertisment
இது போன்ற தகவல்களை மற்றவர்களிடம் சென்று கேட்பதற்கு பலர் தயங்குவார்கள். அந்த வகையில், ஆண்களின் விந்தணுக்களின் ஆற்றலை அதிகரிக்கும் ஒரு பொருள் குறித்து மருத்துவர் யோக வித்யா எடுத்துரைத்துள்ளார்.
சிலாஜித் என்பது நமக்கு இயற்கையாகவே கிடைக்கக் கூடிய மினரல் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இது இமயமலை பகுதியில் இருந்து எடுக்கப்படுகிறது. இதனை சித்த மருத்துவ முறையில் சீராக சுத்திகரித்து பற்பமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இதனை ஒரு நபரின் உடல் எடைக்கு ஏற்ற வகையில் வேகவைத்த முட்டையுடன் சேர்த்து மருந்தாக கொடுக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இவ்வாறு 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், நீர்த்துப் போன விந்தணுக்கள் கெட்டியாக மாறும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
இது தவிர விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எவ்வளவு தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்தான உணவு பொருட்களை சாப்பிட்டாலும், அவை இரத்தத்தில் செயலாற்ற வேண்டும். அவ்வாறு இரத்தத்தில் கலப்பதற்கான தன்மையை அதிகரிப்பது தான் சிலாஜித்தின் வேலை என்று மருத்துவர் யோக வித்யா விளக்கம் அளித்துள்ளார்.
உதாரணத்திற்கு, மாதுளம் பழம் சாப்பிடுகிறோம் என்றால் அதில் இருக்கக் கூடிய ஊட்டச்சத்துகள் அனைத்தும் குடலில் சென்று உறிந்து கொள்வதற்கு சிலாஜித் உதவியாக இருக்கிறது. எனவே, இதனை மருத்துவரின் அறிவுறுத்தலின் படி சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நன்றி - Behindstone Doctors Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.