நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெரிய நெல்லி சாப்பிடுவது சிறந்தது.நெல்லியில் சுவையான ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பேஸ்ட் - 1 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1
எண்ணெய் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
சிவப்பு மிளகாய் - 1 ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி இலை-சிறிதளவு
இஞ்சி-சிறிதளவு
தண்ணீர் - 2கப்
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்க்கவும். முன்னதாக, மிக்ஸியில் நறுக்கிய நெல்லிக்காய், பூண்டு, சீரகப் பொடி, தக்காளி, மிளகு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது இந்த அரைத்த பொருட்களை ஏற்கனவே கடாயில் உள்ள பொருட்கள் வதங்கியதும் இதை சேர்த்து
தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் கம கம சத்தான நெல்லிக்காய் ரசம் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“