ஒரு முறை நெல்லிக்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
20 நெல்லிக்காய்
1 ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு
2 கப் தண்ணீர்
கால் ஸ்பூன் வெந்தயப் பொடி
1 ஸ்பூன் பெருங்காயப் பொடி
2 கொத்து கருவேப்பிலை
3 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
செய்முறை: முதலில் நெல்லிக்காய்யை இடித்துக்கொள்ள வேண்டும். இதை தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைத்து, தோலின் நிறம் மாறியதும் அடுப்பை அணைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் இதை சேர்த்து மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து பொடி செய்து சேர்க்கவும். தொடர்ந்து எண்ணெய்யில் கடுகு, கருவேப்பிலை தாளித்து இதில் கொட்டவும்.