குழந்தைகளுக்கு தரமான ஈவினிங் ஸ்நாக்ஸ்... நெல்லிக்காய் வெஜ் ரோல்: வெங்கடேஷ் பட் ரெசிபி
நெல்லிக்காய் தொக்கு செய்து சப்பாத்தி, பிரட் ஆகிவற்றில் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம், லேசான கசப்பு சுவையுடன் குழந்தைகளுக்கு ஒரு தரமான ஈவ்னிங் ஸ்நாக்ஸாக நெல்லிக்காய் வெஜ்ரோல் செய்வது எப்படி என்று பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் செய்து காட்டியுள்ளார்.
நெல்லிக்காய் தொக்கு செய்து சப்பாத்தி, பிரட் ஆகிவற்றில் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம், லேசான கசப்பு சுவையுடன் குழந்தைகளுக்கு ஒரு தரமான ஈவ்னிங் ஸ்நாக்ஸாக நெல்லிக்காய் வெஜ்ரோல் செய்வது எப்படி என்று பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் செய்து காட்டியுள்ளார்.
செஃப் வெங்கடேஷ் பட் குழந்தைகளுக்கு ஒரு தரமான ஈவ்னிங் ஸ்நாக்ஸாக நெல்லிக்காய் வெஜ்ரோல் செய்வது எப்படி என்று செய்து காட்டியுள்ளார். Image screengrab from YouTube @Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
நெல்லிக்காய் தொக்கு செய்து சப்பாத்தி, பிரட் ஆகிவற்றில் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம், லேசான கசப்பு சுவையுடன் குழந்தைகளுக்கு ஒரு தரமான ஈவ்னிங் ஸ்நாக்ஸாக நெல்லிக்காய் வெஜ்ரோல் செய்வது எப்படி என்று பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் செய்து காட்டியுள்ளார்.
Advertisment
செஃப் வெங்கடேஷ் பட் தனது இதயம் தொட்ட சமையல் யூடியூப் சேனலில் குழந்தைகளுக்கு ஒரு தரமான ஈவ்னிங் ஸ்நாக்ஸாக நெல்லிக்காய் வெஜ்ரோல் செய்வது எப்படி என்று செய்து காட்டியுள்ளார்.
நெல்லிக்காய் தொக்கு செய்முறை:
முதலில் 10 பெரிய நெல்லிக்காய்களை ஆவியில் வேக வைத்து, பின்னர் அதன் சதைப் பகுதியை மட்டும் கட் பண்ணி எடுத்துக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
அடுத்து ஸ்டவ்வைப் பற்றவைத்து ஒரு வானலியை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் 4 டீஸ்பூன் நெய் ஊற்றுங்கள். நெய் உருகியதும் அரை டீஸ்பூன் சீரகம் போடுங்கள், அடுத்து பொடியாக நறுக்கிய பூண்டு 1 டீஸ்பூன் போடுங்கள். பொடியாக நறுக்கி நடுக்கிய இஞ்சி அரை ஸ்பூன் போடுங்கள், வதக்குங்கள். லேசாக கலர் மாறியதும் அரை வெங்காயம் பொடியாக நறுக்கிப் போடுங்கள். வெங்காயம் கலர் மாறக்கூடாது. லேசாக வதக்கியதும் 3 கலர் குடை மிளகாய் நறுக்கி 1 கப் அளவு போட வேண்டும். வேக வைத்த கேரட், வேக வைத்த பீன்ஸ், வேக வைத்த பச்சை பட்டாணி போட வேண்டும். லேசாக வதக்குங்கள். குடை மிளகாய் முழுமையகா வேக வைக்க வேண்டாம்.
அடுத்து, பனீர் ஒரு துண்டு எடுத்து பொடியாக சேமியா போல போல சீவி போடுங்கள். நன்றாகக் கிளறிவிடுங்கள், அதே வேகவைத்த உருளைக் கிழங்கை துருவிப் போடுங்கள். ஸ்டவ்வை சிம்மில் வைத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறிவிடுங்கள். கடைசியாக நறுக்கிய பச்சை மிளகாய் கொஞ்சம் போடுங்கள், கொஞ்சம் கொத்தமல்லி போடுங்கள், தேவையான அளவு உப்பு போடுங்கள். நன்றாகக் கிளறிவிடுங்கள். இப்போது இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, ஒரு வானலியை எடுத்து ஸ்டவ்வில் வையுங்கள், அதில் 3 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றுங்கள், 1 ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் 3 டீஸ்பூன் போடுங்கள். இது நன்றாக வேகட்டும், வெந்த பிறகு, ஆவியில் வேக வைத்து கட் பண்ணி வைத்துள்ள நெல்லிக்காயைப் போடுங்கள். நன்றாக மசித்துவிடுங்கள். கால் ஸ்பூன் மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் மிளகுதூள், 1 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 1 டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் உப்பு போடுங்கள். நன்றாக ஒன்றாக கலந்துவிடுங்கள். 100 மி.லி தண்ணீர் ஊற்றுங்கள், இதனுடன் 75 கிராம் வெல்லம் போடுங்கள். நன்றாகக் கலக்கிவிடுங்கள்.
7-8 நிமிடம் நன்றாக வேக வையுங்கள். நன்றாக வேக வையுங்கள். திக்கான பிறகு கொத்தமல்லி இலை போட்டு இறக்கிவிடுங்கள். அதனுடன் 2 லெமன் சாறு பிழிந்து ஊற்றுங்கள் நன்றாகக் கலக்கிவிடுங்கள். ஃபிரிட்ஜில்
அடுத்து, சப்பாத்தி செய்து, ஒரு சப்பாத்தியை எடுத்து அதன் மீது நெல்லிக்காய் தொக்கு எடுத்து முழுவதும் தடவுங்கள். 4 ஸ்லைஸ் வெங்காயம் வையுங்கள். தயார் செய்த மசாலாவை போடுங்கள். சப்பாத்தியை ரோல் பண்ணுங்கள். அவ்வளவுதான் குழந்தைகளுக்கு ஒரு தரமான ஈவ்னிங் ஸ்நாக்ஸாக நெல்லிக்காய் வெஜ்ரோல் தயார். உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.